Monday, 25 November 2013



தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம்இன்றைய மலர் மருதம் 






தாவரவியல் 

Terminalia elliptica என்ற தாவரவியல் பெயார் கொண்ட மருதம் Combretaceae என்ற தவர குடும்பத்தை சார்ந்த மராமாகும்,மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது.இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது

தினை: 


மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும்வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.

"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப"-பிங்கல நிகண்டு. இவ்வாறு பிங்கல நிகண்டு மள்ளரைமருதநில மக்களாக கூறுகின்றது.

மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மரூஉச் சொல் என பலர் கருதுகின்றனர்.
மருதநிலத்தைப் பற்றி முழுமையான தகவல்களை தரும் பிற்கால இலக்கியம் பள்ளு நூல்கள் ஆகும்.

சங்க காலத்தில் மருதம்

சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர். -அகநானூறு 36 

மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும் செழித்து வளரும்.-ஐங்குறுநூறு 70

மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.-அகநானூறு

மரத்தின் உட்புறம் சிவப்பு.(முடக்காஞ்சி, செம்மருது) - பொருநராற்றுப்படை

உதிர்ந்த பூவும் சிவப்பு.( செவ்வி மருதின் செம்மல்) - குறுந்தொகை 50

மருத மரம் செழுமையான நிழலைத் தரும். உழவர்க்கு நிழல் 
நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம்.அகநானூறு 

நாகதெய்வக் கோயில்-மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது. --பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232

மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி. பரிபாடல் / வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72

அரசன் சேந்தனின் தந்தை அழிசி. அவனது ஊர் ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி. குறுந்தொகை 258 

மருத வேலி-புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்த்தாம். - சிலப்பதிகாரம் 6-140

மருத மாலை

கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் 
- திருமுருகாற்றுப்படை 28


திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்.

No comments:

Post a Comment