Thursday 21 November 2013

தினம் ஒரு மலர் இன்றைய மலர் அனிச்சம் மலர் (ஐந்தாம் தமிழ் சங்கம்)

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம் இன்றைய மலர் அனிச்சம் மலர்

அனிச்சம் மலர் 

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகையான பூக்களை வருணித்து உள்ளார்  





இதுதான் அனிச்சம் மலர். முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர். கற்புடைய பெண்களை இம்மலரோடு ஒப்பிட்டுக் குறிஞ்சிப் பாடலில் பாடியுள்ளார் கபிலர்.

தன் கற்பை உயிரினும் பெரிதாய்ப் போற்றும் மங்கைகள் வேறொருவன் பார்வை தன் மேல் பட்டாலே தன்னுயிரை மாய்த்துக் கொள்வர். அதேபோல, இம்மலரும் முகர்ந்து பார்த்தாலே வாடும் தன்மைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இப்பெயர்களின் உட்பொருளானது அப்பெண் ஒரு கற்புக்கரசி என்பதாகும்.

மேலும் அனிச்சம் மலர் குறித்து ஐய்யன் வள்ளுவர் குறிப்பிட்டு உள்ள குரல்களையும் பாருங்கள்

அனிச்சம் மலர்

மிகவும் மென்மையான பூ அனிச்சம்பூ. கைகளால் தீண்டினாலோ அல்லது முகர்ந்து பார்த்தாலோ வாடிவிடும் அளவுக்கு மென்மையானது இந்த அனிச்சம்பூ. திருவள்ளுவர் தம் குறள்களில் பலவற்றில் அனிச்சம் பூவினை அழகாக கையாண்டுள்ளார்.


“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”

பொருள்: முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூ அதுபோல எமது முகத்தில் சிறுமாறுபாடும் நோக்கிய உடனே விருந்தினரின் உள்ளமும் வாடி விடுவிடும்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவன்”

பொருள்: அனிச்ச மலரின் மென்மையைக் காட்டிலும் என் காதலி மென்மையானவள்.


அனிச்சம் மலர்
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை”

பொருள்: காதலியின் நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்.

“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்”

பொருள்: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.


1 comment:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது தங்களது அனிச்ச மலரின் தேர்வும், பொருளும். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete