Monday 25 November 2013

ஒவொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய விடையம்

தமிழனின் பெருமை - அகத்தியர் 
ஒவொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய விடையம் 

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண்குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும்
உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம் இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.





சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார்
4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி. இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,
"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும்.பின்னே அதை ஈரமான மரத்தூள்,பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"
மித்ரவருனசக்தியா அப்படினா என்ன?
சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe
(சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு,தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய காலபடைப்புகளில் தேடலைத் தொடங்கினார்.அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் Joshi) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான ட்ரைவ்.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார்.

புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (Hole) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார். ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர்
வந்து முட்டி மோதி நின்ற இடம் "சிகிக்ரிவம்" என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம்.

அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும்
திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார்
"அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது.

ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான்.
"காப்பர் சல்ஃபேட்".......! கண்டுபிடித்தாகி விட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit current. கிடைக்கப்பெற்றது ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.
இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு.

வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள்.

ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா?

தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில்.
அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொடரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.
இருங்க இருங்க..,

நம்ம பாட்டன் இதோட நிருத்திடல..
இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால்
பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.


அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "எலெக்ட்‌ராப்லேடிங்க்" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்
இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.
அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.


தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம்இன்றைய மலர் மருதம் 






தாவரவியல் 

Terminalia elliptica என்ற தாவரவியல் பெயார் கொண்ட மருதம் Combretaceae என்ற தவர குடும்பத்தை சார்ந்த மராமாகும்,மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது.இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது

தினை: 


மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும்வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.

"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப"-பிங்கல நிகண்டு. இவ்வாறு பிங்கல நிகண்டு மள்ளரைமருதநில மக்களாக கூறுகின்றது.

மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மரூஉச் சொல் என பலர் கருதுகின்றனர்.
மருதநிலத்தைப் பற்றி முழுமையான தகவல்களை தரும் பிற்கால இலக்கியம் பள்ளு நூல்கள் ஆகும்.

சங்க காலத்தில் மருதம்

சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர். -அகநானூறு 36 

மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும் செழித்து வளரும்.-ஐங்குறுநூறு 70

மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.-அகநானூறு

மரத்தின் உட்புறம் சிவப்பு.(முடக்காஞ்சி, செம்மருது) - பொருநராற்றுப்படை

உதிர்ந்த பூவும் சிவப்பு.( செவ்வி மருதின் செம்மல்) - குறுந்தொகை 50

மருத மரம் செழுமையான நிழலைத் தரும். உழவர்க்கு நிழல் 
நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம்.அகநானூறு 

நாகதெய்வக் கோயில்-மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது. --பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232

மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி. பரிபாடல் / வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72

அரசன் சேந்தனின் தந்தை அழிசி. அவனது ஊர் ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி. குறுந்தொகை 258 

மருத வேலி-புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்த்தாம். - சிலப்பதிகாரம் 6-140

மருத மாலை

கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் 
- திருமுருகாற்றுப்படை 28


திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்.

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம்இன்றைய மலர் நெய்தல் 


தாவரவியல் : Nymphaea nouchali என்ற தவரவியல் பெயர் கொண்ட நெய்தல் மலர் Nymphaeaceae என்னும் தாவரவியல் குடும்பத்தை சார்ந்த நீர் வாழ் தவரமகும் 

நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல் நிலம்என்றனர்.
ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.

நெய்தல் திணை 

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும்.. பெரும்பொழுது இளவேனில் மற்றும் முதுவேனில். சிறுபொழுது நண்பகல் ஆகும்.. வருணன் ஆகிய தெய்வம் முதலாக கடல் ஆடுதல் தொழில் நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள் ஆகும்...

"காமந் தாங்குமதி என்போர் தாம
தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் 
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே". - குறுந்தொகை


தலைவன் பிரிந்த காலத்தில். "நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக. "காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்" என்று தலைவி கூறியது.

நன்னீர் மலர்

குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.
நீர்நிலை மலர்
ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது.
இது சுனையிலும், குளங்களிலும் பூக்கும்.
வயல்வெளி மலர்
மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது. 
இது வயலில் பூக்கும்.

உவர்நீர் மலர்

கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.



சங்கப்பாடல்கள் தரும் செய்தி


நெய்தல் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும். -ஐங்குறுநூறு 181,நற்றிணை 113,
நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும். -ஐங்குறுநூறு 
உப்பங்கழியில் பூக்கும். நெல்வயலில் பூக்கும்.- அகம் மற்றும் புறம் 
அலங்கும் இதழ்களைக் கொண்டது.- ஐங்குறுநூறு 185 
புல்லிய இதழ்களைக் கொண்டது -நற்றிணை 239
நெய்தல் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர். திணைமொழி ஐம்பது 41 
கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர்.தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர். -ஐங்குறுநூறு 135 
நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை. ஐங்குறுநூறு 
வைகறையில் மலரும். 
புன்னைப்பூவின் தாதுகள் நெய்தல்மீது கொட்டும்.
எருமை நெய்தலின் புதுப்பூக்களை மேயும்.- ஐங்குறுநூறு 


சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது. -
புறம் 10

Saturday 23 November 2013

தினம் ஒரு மலர் இன்றைய மலர் காஞ்சி மலர்

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம்

இன்றைய மலர் காஞ்சி மலர்


காஞ்சி மலர்


தாவரவியல் :
(Trewia nudiflora) வெள்ளை தேக்கு Euphorbiaceae என்னும் தாவரவியல் குடும்பத்தை சார்ந்தது இருவித்திலை மராமாகும் 

காஞ்சித்திணை

காஞ்சிப் பூவைச் சூடிக்கொண்டு போரிடுவது காஞ்சித்திணை.
தொல்காப்பியம் கூறும் புறத்திணை ஏழில் காஞ்சித்திணை ஒன்று. இறந்தவர்களுக்காக இரங்கல், இறந்தவருடன் தானும் முடிதல் முதலான செய்திகளைக் கூறுவது தொல்காப்பியர் காட்டும் காஞ்சித்திணை.
ஐயனாரிதனார் என்னும் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர் தாம் எழுதிய புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலில் புறப்பொருளைப் பன்னிரண்டு திணைகளாக வகுத்துள்ளார். அவற்றில் பகைவனை வெல்லக் கருதியவன் வஞ்சிப்பூ சூடிப் போருக்குக் செல்வான் என்றும், அவனது போரை எதிர்கொண்டு தாக்குபவன் காஞ்சிமலர் சூடிப் போரிடுவான் என்றும் இவர் குறிப்பிடுகிறார்.

காஞ்சி மலர்



சங்கப்பாடல்களில் காஞ்சிமலர்

காஞ்சி மரத்துக்குச் செம்மருது என்னும் பெயரும் உண்டு.

நறும்பூங் கோதை தொடுத்த நாள்சினைக் குறுங்கால் காஞ்சி - சிறுபாணாற்றுப்படை 179

குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும்.
பசுமையான இலைகளை உடைய குருகு என்னும் கொடி குறுங்கால் காஞ்சி மரத்தில் ஏறிப் படர்ந்து பூத்துக் கிடக்கும்-பெரும்பாணாற்றுப்படை 375

ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் காஞ்சி மரங்கள் இருந்தன- மலைபடுகடாம் 449

காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்-ஐங்குறுநூறு 1

பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்- அகநானூறு

காஞ்சிப்பூவின் மணத்தை வதுவை நாற்றம் என்றனர் -அகநானூறு

மணல் மலிந்த ற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும் -பதிற்றுப்பத்து 23

மீனேற்றுக் கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சி - கலித்தொகை 26-3 காஞ்சிமரம் காமன் போல் அழகு மிக்கது.

மயில் மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி குயில் முதலான பறவைகள் காஞ்சி காஞ்சி மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்.

காஞ்சி மலர்

பயன்பாடுகள் : 

காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர்- கலித்தொகை 34-8

காஞ்சி தழைக்காக வெட்டப்படும் -பதிற்றுப்பத்து 62

மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று.குறிஞ்சிப்பாட்டு

அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு.

காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர்


Thursday 21 November 2013

பண்டைய தமிழர்களின் போர் முறைகள் (போர் தருமம்)

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும்.



அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது.

காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது.

முழுஇரவு ஓய்விற்குப் பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை 

எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது.

நிராயுதபாணிகளுடன் போர் புரிவதை இழுக்கு என்று கருதினர் 

இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்.

எதிர் குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர்.

அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர்.

இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக் களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது. 

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க் கருவிகள், பல திட்டங்கள் உதவி புரிந்திருக்க வேண்டும். 

அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன.

தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க் கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர். மேலும் தமிழர்களின் எயில் போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது. எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர். தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க் கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும்,
அவை:

1. இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள்.
2. எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும்.

இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப் பெற்று விளக்கப்படுகிறது.

மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்
"மன்னன் வழித்தே மலர்தலை உலகம்" ---என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர் தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்.

அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப் படைகளை வைத்திருந்தனர்.

நால் வகைப் படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன.

இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊருக்கு அல்லது வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்.

களிறு, தேர், நடைநவில் புரவி ஆகிய இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது.

கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும். இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க் கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும். எனவே நாற்படை உடைய அரசன் அப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்க வேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது.

மன்னர் பின்னோர்
மன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிந்தனர். தேர், குதிரை ஏறிப் போர் புரியும் வீரர்கள் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர். இவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன.

தமிழரின் முப்போர்க்கருவிகள்
தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க் கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவை வாள், வில், வேல் என்பனவாகும். 

இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது.

வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது.

இம் முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன. அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்.

மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோல் மற்றும் புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்

வாள்- ஆண்களுக்கு மிகுதியாகப் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளனர்.

வேல் - முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன் படுத்தப்பட்டுள்ளன.

வில்,அம்பு, அம்பறாத்தூணி --- இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன் படுத்தியுள்ளனர்.

படைக்கலக் கொட்டில்- தொழிற்கூடம்
சங்ககாலத் தமிழர் போர்க் கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர். அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக் கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர்.

படைவீடு
போரில் வெற்றி பெற்ற பின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர். அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க் கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும். உடைந்த போர்க் கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றிருக்கும்.

சங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

"தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து." (குறள் -828)

என்ற குறளில் காட்டப்பெறும் தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும். சங்க காலத்தில் நிலவிய போர்த் தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது.

தலைவாழை இலை





தினம் ஒரு மலர் இன்றைய மலர் அனிச்சம் மலர் (ஐந்தாம் தமிழ் சங்கம்)

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம் இன்றைய மலர் அனிச்சம் மலர்

அனிச்சம் மலர் 

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகையான பூக்களை வருணித்து உள்ளார்  





இதுதான் அனிச்சம் மலர். முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர். கற்புடைய பெண்களை இம்மலரோடு ஒப்பிட்டுக் குறிஞ்சிப் பாடலில் பாடியுள்ளார் கபிலர்.

தன் கற்பை உயிரினும் பெரிதாய்ப் போற்றும் மங்கைகள் வேறொருவன் பார்வை தன் மேல் பட்டாலே தன்னுயிரை மாய்த்துக் கொள்வர். அதேபோல, இம்மலரும் முகர்ந்து பார்த்தாலே வாடும் தன்மைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இப்பெயர்களின் உட்பொருளானது அப்பெண் ஒரு கற்புக்கரசி என்பதாகும்.

மேலும் அனிச்சம் மலர் குறித்து ஐய்யன் வள்ளுவர் குறிப்பிட்டு உள்ள குரல்களையும் பாருங்கள்

அனிச்சம் மலர்

மிகவும் மென்மையான பூ அனிச்சம்பூ. கைகளால் தீண்டினாலோ அல்லது முகர்ந்து பார்த்தாலோ வாடிவிடும் அளவுக்கு மென்மையானது இந்த அனிச்சம்பூ. திருவள்ளுவர் தம் குறள்களில் பலவற்றில் அனிச்சம் பூவினை அழகாக கையாண்டுள்ளார்.


“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”

பொருள்: முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூ அதுபோல எமது முகத்தில் சிறுமாறுபாடும் நோக்கிய உடனே விருந்தினரின் உள்ளமும் வாடி விடுவிடும்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவன்”

பொருள்: அனிச்ச மலரின் மென்மையைக் காட்டிலும் என் காதலி மென்மையானவள்.


அனிச்சம் மலர்
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை”

பொருள்: காதலியின் நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்.

“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்”

பொருள்: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.