Showing posts with label சுரம். Show all posts
Showing posts with label சுரம். Show all posts

Saturday, 14 June 2014

ஏழு சுரங்களின் பெயர்க் காரணங்கள் ......


இசையால் வசமாக இதையமுண்டோ 



1. ஷட்ஜம் (ச): ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு)

2. ரிஷபம் (ரி): இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.

3. காந்தாரம் (க): காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.

4. மத்திமம் (ம): ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.

5. பஞ்சமம் (ப): ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)

6. தைவதம் (த): தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.

7. நிஷாதம் (நி) ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.

சரிகமபதநிச