Monday 25 November 2013

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம்இன்றைய மலர் நெய்தல் 


தாவரவியல் : Nymphaea nouchali என்ற தவரவியல் பெயர் கொண்ட நெய்தல் மலர் Nymphaeaceae என்னும் தாவரவியல் குடும்பத்தை சார்ந்த நீர் வாழ் தவரமகும் 

நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல் நிலம்என்றனர்.
ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.

நெய்தல் திணை 

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும்.. பெரும்பொழுது இளவேனில் மற்றும் முதுவேனில். சிறுபொழுது நண்பகல் ஆகும்.. வருணன் ஆகிய தெய்வம் முதலாக கடல் ஆடுதல் தொழில் நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள் ஆகும்...

"காமந் தாங்குமதி என்போர் தாம
தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் 
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே". - குறுந்தொகை


தலைவன் பிரிந்த காலத்தில். "நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக. "காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்" என்று தலைவி கூறியது.

நன்னீர் மலர்

குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.
நீர்நிலை மலர்
ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது.
இது சுனையிலும், குளங்களிலும் பூக்கும்.
வயல்வெளி மலர்
மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது. 
இது வயலில் பூக்கும்.

உவர்நீர் மலர்

கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.



சங்கப்பாடல்கள் தரும் செய்தி


நெய்தல் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும். -ஐங்குறுநூறு 181,நற்றிணை 113,
நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும். -ஐங்குறுநூறு 
உப்பங்கழியில் பூக்கும். நெல்வயலில் பூக்கும்.- அகம் மற்றும் புறம் 
அலங்கும் இதழ்களைக் கொண்டது.- ஐங்குறுநூறு 185 
புல்லிய இதழ்களைக் கொண்டது -நற்றிணை 239
நெய்தல் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர். திணைமொழி ஐம்பது 41 
கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர்.தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர். -ஐங்குறுநூறு 135 
நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை. ஐங்குறுநூறு 
வைகறையில் மலரும். 
புன்னைப்பூவின் தாதுகள் நெய்தல்மீது கொட்டும்.
எருமை நெய்தலின் புதுப்பூக்களை மேயும்.- ஐங்குறுநூறு 


சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது. -
புறம் 10

No comments:

Post a Comment