Showing posts with label வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள். Show all posts
Showing posts with label வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள். Show all posts

Tuesday, 10 June 2014

வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள்

வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள் 



1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும்,தந்தையும்

2. வந்தால் போகாதது - புகழ், பழி

3. போனால் வராதது - மானம்,உயிர்

4. தானாக வருவது - இளமை,முதுமை

5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,

6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்

7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்

8. நம்மால் பிரிக்க முடியாதது -பந்தம்,பாசம்

9. அழிவை தருவது - பொறாமை,கோபம்

10. எல்லோருக்கும் சமமானது -பிறப்பு,இறப்பு

11. கடைத்தேற வழி -உண்மையும்,உழைப்பும்

12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி,செய் நன்றி மறப்பது

13. வருவதும் போவதும் - இன்பம்,துன்பம்

14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று

15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு

17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி

18. மிகக் கொடிய நோய் - பேராசை

19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

20. கீழ்தரமான விஷயம் - பொறாமை

21. நம்பக்கூடாதது - வதந்தி

22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

23. செய்யக்கூடாதது - தவறுகள்

24. செய்ய வேண்டியது - உதவி

25. விலக்க வேண்டியது - விவாதம்

26. உயர்வுக்கு வழி - உழைப்பு

27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு