Saturday 14 December 2013

தமிழர் கணிததிறன்



தமிழர் கணிததிறன் 


ஒரு பூசணிக்காயை வெட்டாமல் அதுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்கு என்பதை உங்களால் சொல்லமுடியுமா?

ஆச்சர்யபடவேண்டாம் நண்பர்களே முடியும் அதற்க்கு தமிழ் இலக்கியத்தில் நாம் முன்னோர்கள் வழி சொல்லி இருக்கிறார்கள் 


கணக்கதிகாரம். 


கொறுக்கையூர் காரி நாயனார் என்பவரால் எழுதப்பட்ட ஒரு தமிழ்க் கணித நூல். புதிர்க்கணக்குகள் மற்றும் கணிதச் செய்திகளை அறிவியல் வழியே தரும் இந்நூல், தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. 

கணக்கதிகாரம் 1854-களில் இருந்தே அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது. பொழுதுபோக்கு வினா-விடைக் கணக்குகள், பின்ன எண்களின் 
பெயர்கள், எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள் போன்ற பகுதிகள் கணக்கதிகாரத்தில் குறிப்பிடத்தக்கவையாகும். 

"கீற்றெண்ணி முத்தித்து கீழாறினால் மாறி
வேற்றையருசு தன்னில் மிகப் பெருக்கிப் பார்த்ததிலே
பாதித் தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

                                                     ---கணக்கதிகாரம்
அதாவது, ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ண வேண்டுமாம். அதை 3, 6, 5 இவற்றால் பெருக்கி வரும் விடையைப் பாதியாக்கி, மீண்டும் மூன்றால் பெருக்கினால் விதைகளின் எண்ணிக்கை தெரிந்துவிடும்.


உதாரணமாக, ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கை 5 என வைத்துக்கொள்வோம். பாடலின் படி அதை 3, 6, 5 ஆகியவற்றால் பெருக்கினால் கிடைப்பது 450. அதைப்பாதியாக்கினால் கிடைப்பது 225. அதை மீண்டும் மூன்றால் பெருக்கினால் 
கிடைப்பது 675. எனவே, பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 675 

இது எப்படி என்பதுதான் அறிவியலுக்கு எட்டாத மர்மமாக உள்ளது. அடுத்த தடவை பூசணி வாங்கும்போது, மேற்கூறியபடி செய்துதான் பாருங்களேன்.

மேலும் கணக்கதிகாரம் புத்தகத்தினை தரவிறக்கம்  செய்ய இங்கே  சொடுக்குங்கள் 


No comments:

Post a Comment