Monday, 28 April 2014

”தமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா ??? ”


”தமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா  ???” 


ஏன் மதிப்பு இல்லை? அவர் அவ்வாறு கூற என்ன காரணம்?

முதல் காரணம் ;- தாழ்வு மனப்பான்மை. தமிழில் பேசினால் படிப்பறிவு அற்றவர்கள் என்ற எண்ணம்.

இரண்டாவது காரணம் ;- ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே பெரிய படிப்புப் படித்தவர்கள் என்று சித்தரிக்கும் தமிழ்த் திரைப்படங்கள்.

மூன்றாவது காரணம் ;- ஏழ்மை. ஏழைகளின் மொழி தமிழ், செல்வம் படைத்தவர்களின் மொழி ஆங்கிலம் என்றால் முட்டாள்தனம்.

நான்காவது காரணம் ;- ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கட்டளையிடும் தனியார் பள்ளிக்கூடங்கள்.

ஐந்தாவது காரணம் ;- ஆங்கிலம் பேசும் நாடுகள் உலக அளவில் பணக்கார நாடுகளாய் இருப்பது.

ஆறாவது காரணம் ;- கேவலமான, முறையற்ற தமிழில் பேசித் திரிவது.

ஏழாவது காரணம் ;- இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ்ப் பேசப் படுகிறது என்ற தவறான எண்ணம்.

எட்டாவது காரணம் ;- தமிழில் பணிவாகக் கூறினால் கேட்காமல், ஆங்கிலத்தில் அசிங்கமாகத் திட்டியவுடன் கையைக் கட்டி கும்பிடுப் போடும் மூடத்தனம்.

ஒன்பதாவது காரணம் ;- தமிழில் பேசுபவர்களை, “பழம், புலவர், கவிஞர், திருவள்ளுவரின் பேரன்” என்றெல்லாம் விமர்சிப்பது.

பத்தாவது காரணம் ;- ஆங்கிலம் தான் உலகில் அதிகமாகப் பேசப்படுகிறது என்ற வதந்திகள்.

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் இருந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க அன்றொருவர் வந்தார், இந்த மூடர்களின் நம்பிக்கைகளை ஒழிக்க யார் வருவார்?

ஓர் எழுத்து சொற்கள் தமிழ் இலக்கணம்

ஓர் எழுத்து  சொற்கள் தமிழ் இலக்கணம் 

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன, அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

Friday, 25 April 2014

அப்பாடக்கர்

நீ என்ன பெரிய அப்பாடக்கரா ஆ ஆ ஆ .....??


அப்பாடக்கர் என்றால் என்ன? உங்கள் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம் (இணையத்தில் படித்தது)

""இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.


அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க ""

உங்கள் கற்பனையில் வேறு விளக்கம் இருந்தால் அதையும்தான் சொல்லுங்களேன்!